இலங்கை மற்றும் சுற்றுலா நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடியது 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 135 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. மிச்செல் பிரேஷ்வெல் மற்றும் ப்ளோக்ஸ் ஆகியோர் தலா 27 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.
இலங்கை அணியின் பந்து வீச்சில் துனித்த வெல்லாலகே 3 விக்கெட்டுக்களையும் நுவன் துஷார மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா இவ்விரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
136 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடியது 19 ஓவர்களில் 06 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. அணித்தலைவர் ச்சரித் ஹசலங்க ஆட்டமிழக்காது 35 ஓட்டங்களையும் , குசல் பெரேரா மற்றும் கமிந்து மெண்டிஸ் இருவரும் தலா 23 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றிக்கு பங்களிப்பு வழங்கினர்.








