சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 6201 குடும்பங்களைச் சேர்ந்த 21,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
புத்தளம், முந்தல், கல்பிட்டி, ஆனமடு, நாத்தாண்டி, மாதம்பை, மகாவெவ, ஆராச்சிக்கட்டு, சிலாபம் மற்றும் வென்னப்புவ ஆகிய 10 பிரதேச செயலாள பிரிவுகளுக்குட்பட்ட 59 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் மற்றும் முந்தல் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதிக்கப்பட்டுள்ள 90 குடும்பங்களைச் சேர்ந்த 322 பேர்கள 03 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருவதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.








