2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சகல பாடசாலைகளுக்கும் விஷேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் பாடசாலைகள் மூடப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மீண்டும் பாடசாலைகள் நவம்பர் 18 ஆம் திகதி திறக்கப்படுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கெடுப்பு நவம்பர் 14 ஆம் திகதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளமை குறிப்பிடதக்கது.








