வடக்கு காஸாவில் கடுமையான பஞ்சம் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காஸாவில் செயல்படும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் ஊடுருவி கடந்த ஆண்டு தாக்குதல் நடத்தினர். அதனையடுத்து இருதரப்பினரிடையே தொடர்ந்தும் மோதல் இடம்பெறுகிறது.. யுத்த நிலைக் காரணமாக ஏராளமானோர் அயல் நாடுகளுக்கு சென்று தஞ்சமடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் வடக்கு காஸாவில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ராஸ் எட்னோம் தெரிவித்துள்ளார்.
உடனடியாக நடவடிக்கை எடுக்க உலக நாடுகள் கைகோர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். முக்கிய உணவுப் பொருட்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு மருந்து பொருட்களை சில தினங்களில் கொண்டு சேர்க்க வேண்டும் என டெட்ராஸ் எட்னோம் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாத இறுதியில் காஸாவிற்கு பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தபட்ட நிலையில் பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை துரிதமாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.








