பாராளுமன்ற பொதுத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் நவம்பர் 11ம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கமைய அனைத்து தேர்தல் வேட்பாளர்களும் தேர்தல் பிரசாரம் செய்ய இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளன.
நவம்பர் 11 நள்ளிரவு முதல் அமைதி காலம் தொடங்கும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளhர்.
அதனையடுத்து வேட்பாளர்களின் குடும்பத்தினர் வாக்களிக்க கோரும் நடவடிக்கையும் முடிவுக்கு வரும். வீடு வீடாகச் செல்வதும் சட்டவிரோதமான செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்இ மத ஸ்தலங்கள்இ மதகுருமார்கள் மற்றும் அவர்களின் மத நடவடிக்கைகளை பிரசாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது எனவும்இ வேட்பாளர்கள் பிரித் நூல் கட்டுவதை புகைப்படம் எடுத்து பிரசாரம் செய்ய கூடாது எனவும் தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை பொதுத்தேர்வு வரும் 14ம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை செலுத்தும் வாய்ப்பு நாளையுடன் நிறைவடைகிறது.








