பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் சகிப் அல் ஹசனின் பந்து வீச்சு பாணி குறித்து சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்து கவுண்டி செம்பியன்சிப் தொடரில் சர்ரே அணியில் விளையாடி வரும் நிலையில் அவருடைய பந்து வீச்சு பாணி குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. 37 வயதான பங்களாதேஷ் சகிப் அல் ஹசன் இப்பருவத்தில் இதுவரை 11 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில் கிப் அல் ஹசன் அடுத்து வரும் போட்டிகளில் விளையாடுவதில் இருந்து இடைநிறுத்தப்படவில்லை எனினும் அவரது பந்து வீச்சு பாணியை சோதனைக்கு உட்படுத்தப்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பந்து வீச்சு சோதனை நடைபெறுnkd எதிர்பார்க்கப்படுகிறது.









