லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் காணப்படும் எரிவாயு விலைக்கு அமைய விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
12.5 கிலோகிராம் நிறைகொண்ட வீட்டு பாவனைக்கான எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டு 3,690 ரூபாவாக விற்பனைசெய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 5 கிலோகிராம் நிறைகொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 40 ரூபாவாலும், 2.3 கிலோகிராம் நிறைகொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 18 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.
5 கிலோகிராம் நிறைகொண்ட எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1482 ரூபாவாகவும் 2.3 கிலோகிராம் நிறைகொண்ட எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 694 ரூபாவாகவும் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் விற்பனைசெய்யப்படுமென லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.








