பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையிலும் முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க முடியாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலையை மறுசீரமைப்பின் போதும் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க முடியாது எனவும் தர்மசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
முச்சக்கரவண்டிகளை பயன்படுத்தும் மக்களுக்கு அதன் பலனை வழங்குவதற்கான முறையான திட்டம் தயாரிக்கப்படவில்லை எனவும் அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.








