ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான எயார்பஸ் விமானக் கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு மற்றும் பணமோசடி தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இதன்படி, நாமல் ராஜபக்சவை 5 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 10 கோடி ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், அவருக்கு வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறு நீதிமன்றப் பதிவாளருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.









