போதைப்பொருள் அச்சுறுத்தலை நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட 1818 அவசர அழைப்பு இலக்கம், தற்போது 24 மணிநேரமும் தடையின்றி இயங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் போதைப்பொருள் கடத்தல், விநியோகம் மற்றும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் பாதுகாப்புத் தரப்பினருக்கு வழங்க முடியும்.
தகவல் வழங்குபவர்களின் ரகசியத்தன்மை முழுமையாகப் பாதுகாக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
எந்த நேரத்திலும் பாதுகாப்பான முறையில் தகவல்களை வழங்க 1818 என்ற இலக்கத்திற்கு அழைக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.









