Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகளைப் புனரமைக்க இலங்கைக்கு 110 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

புரட்டாதி 30, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகளைப் புனரமைக்க இலங்கைக்கு 110 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகளைப் புனரமைக்க இலங்கைக்கு 110 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.

உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தின் அவசரகால பதிலளிப்பு பிரிவின் ஊடாக வழங்கப்படும் இந்த நிதி, சூறாவளியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 600 கிலோமீற்றர் நீளமான வீதிகளைப் புனரமைக்க பயன்படுத்தப்படவுள்ளது.

இதன் மூலம் சந்தைகள், பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகளுக்கான போக்குவரத்துத் தொடர்புகளை மீளமைப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.

வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளை எதிர்கொள்ளும் வகையில், காலநிலை மாற்றத்துக்கு ஏற்ற மீள்திறன் கொண்ட புதிய பொறியியல் தரநிலைகளைப் பயன்படுத்தி இந்த வீதிகள் புனரமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நிதியுதவியுடன், உலக வங்கியின் உள்ளடக்கிய இணைப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டத்தின் மொத்த முதலீடு 610 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் 8 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 20 இலட்சம் மக்கள் நேரடியாகப் பயனடைவதுடன், 5,600க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், சந்தைத் தொடர்புகள் மீளமைக்கப்படுவதன் மூலம் 22,000க்கும் அதிகமான தேயிலை, காய்கறி மற்றும் நெல் விவசாயிகள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய டித்வா சூறாவளியினால் நாட்டின் போக்குவரத்துத் துறைக்கு சுமார் 973 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில், புதிய நிதியுதவி நாட்டின் போக்குவரத்து உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதார மீட்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் என உலக வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

முந்தைய செய்தி

பெல்மதுளையில் பாரிய மரக்கிளை முறிந்து விழுந்து 6 லயன் அறைகள் சேதம்!

அடுத்த செய்தி

எயார்பஸ் கொள்வனவு வழக்கு: பிணைப் பணத்தை அரசுடைமையாக்க உத்தரவு

தொடர்புடைய செய்திகள்

நாமல் ராஜபக்ச பிணையில் விடுதலை
அண்மைய செய்திகள்

நாமல் ராஜபக்ச பிணையில் விடுதலை

புரட்டாதி 30, 2026
போதைப்பொருள் தகவல்களுக்கு 1818 – 24 மணிநேர சேவை
அண்மைய செய்திகள்

போதைப்பொருள் தகவல்களுக்கு 1818 – 24 மணிநேர சேவை

புரட்டாதி 30, 2026
எயார்பஸ் கொள்வனவு வழக்கு: பிணைப் பணத்தை அரசுடைமையாக்க உத்தரவு
அண்மைய செய்திகள்

எயார்பஸ் கொள்வனவு வழக்கு: பிணைப் பணத்தை அரசுடைமையாக்க உத்தரவு

புரட்டாதி 30, 2026
பெல்மதுளையில் பாரிய மரக்கிளை முறிந்து விழுந்து 6 லயன் அறைகள் சேதம்!
அண்மைய செய்திகள்

பெல்மதுளையில் பாரிய மரக்கிளை முறிந்து விழுந்து 6 லயன் அறைகள் சேதம்!

புரட்டாதி 30, 2026
மொராக்கோவின் முதல் பெண் பிரதமராக பாத்திமா எல் மன்சூரி
அண்மைய செய்திகள்

மொராக்கோவின் முதல் பெண் பிரதமராக பாத்திமா எல் மன்சூரி

புரட்டாதி 30, 2026
ரணில் விக்ரமசிங்கவுக்கு   எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு
அண்மைய செய்திகள்

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு

புரட்டாதி 30, 2026
பௌசி அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு
அண்மைய செய்திகள்

பௌசி அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

புரட்டாதி 29, 2026
கொழும்பில் 122 மெட்ரோ பேருந்துகள் சேவையில்
அண்மைய செய்திகள்

கொழும்பில் 122 மெட்ரோ பேருந்துகள் சேவையில்

புரட்டாதி 29, 2026
அடுத்த செய்தி
எயார்பஸ் கொள்வனவு வழக்கு: பிணைப் பணத்தை அரசுடைமையாக்க உத்தரவு

எயார்பஸ் கொள்வனவு வழக்கு: பிணைப் பணத்தை அரசுடைமையாக்க உத்தரவு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check