ரயில் பயணிகள் இணையவழி ஊடாக பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
www.pravesha.lk அல்லது http://www.pravesha.lk என்ற இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், Pravesha என்ற தொலைபேசி செயலி ஊடாகவும் ரயில் பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்ய முடியும்.
ரயில் பொது முகாமையாளரை பதவி நீக்கம் செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பணிப்புறக்கணிப்பு காரணமாக பெரும்பாலான ரயில் நிலையங்களில் பயணச்சீட்டுகள் விநியோகிக்கப்படாத நிலையில், பயணிகளின் வசதிக்காக இணையவழி பயணச்சீட்டு கொள்வனவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.








