நீதிபதிகளின் சம்பளத்திலிருந்து முன்பண தனிநபர் வருமான வரியை (APIT) அறவிடுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எடுத்த தீர்மானம் சட்டபூர்வமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டத்தின் கீழ், நீதிபதிகளின் சம்பளத்தில் இருந்து APIT வரியை அறவிடுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை சவால் செய்து பல்வேறு நீதித்துறை அமைப்புகள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
மேல் நீதிமன்ற நீதியரசர்கள் சங்கம், மாவட்ட நீதிபதிகள், நீதிவான்கள் மற்றும் மேலதிக நீதிவான்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நீதித்துறை உத்தியோகத்தர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
மேலும், தொழிலாளர் தீர்ப்பாயத் தலைவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கமும் குறித்த தீர்மானத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுக்களை பரிசீலித்த உயர் நீதிமன்றம், அவற்றை நிராகரித்ததுடன், உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் நீதிபதிகளின் சம்பளத்திலிருந்து APIT வரியை அறவிடுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் சட்டபூர்வமானது எனத் தீர்ப்பளித்துள்ளது.








