கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் MBBS படிப்பை நிறைவு செய்த டொக்டர் ஹஷினி ரங்கிகா எபா ஆராச்சி ( Dr. Hashini Rangika Epa Arachchi ) பல்கலைக்கழகத்தின் MBBS பாடநெறிக்காக வழங்கப்பட்ட 32 தங்கப் பதக்கங்களில் 16 தங்கப் பதக்கங்களை வென்று அபார சாதனை படைத்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் 2025ஆம் ஆண்டுக்கான பொதுப் பட்டமளிப்பு விழாவில் இந்தப் பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. 32 MBBS தங்கப் பதக்கங்களில் பாதியை ஒரே பட்டதாரி பெற்றிருப்பது அவரது கல்விச் சாதனையின் சிறப்பை வெளிப்படுத்துகிறது.
இவர் MBBS மருத்துவப் படிப்பின் ஐந்து கல்விப் பிரிவுகளிலும் First Class Honours பெற்றுள்ளார். இறுதி MBBS பரீட்சையிலும் முதல் வகுப்பைப் பெற்றுள்ளார்.
மேலும், தனது MBBS தொகுதியின் Valedictorian ஆகவும் அவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழக சாதனையுடன் மட்டுப்படாமல், மருத்துவப் பட்டதாரிகளுக்கான பயிற்சி மருத்துவ நியமனங்களுக்கான பொதுத் தகுதி அடிப்படையிலான பட்டியலில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தையும் டொக்டர் ஹஷினி பெற்றுள்ளார்.
மேலும் பல விருதுகள்
அவரது கல்விச் சாதனைகளுக்காக Professor Tilak Hettiarachchy Award for Academic Excellence விருதும் வழங்கப்பட்டுள்ளது.
இதனுடன் பல Dean’s List Awards மற்றும் Mitsubishi UFJ Foundation Scholarship ஆகியவற்றையும் அவர் பெற்றுள்ளார்.
மருத்துவ ஆய்விலும் ஆர்வம்
கல்விச் சாதனைகளுடன், டொக்டர் ஹஷினி மருத்துவ ஆய்வுத் துறையிலும் ஈடுபட்டுள்ளார்.
கர்ப்பிணிப் பெண்களின் மனநலம், scrub typhus, dengue மற்றும் interstitial lung disease உள்ளிட்ட மருத்துவத் துறைகள் தொடர்பான ஆய்வுப் பணிகளில் அவர் பங்களித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்வியில் இலங்கையைச் சேர்ந்த இளம் தலைமுறையினருக்கு இந்தச் சாதனை ஒரு முக்கிய முன்னுதாரணமாக அமைந்துள்ளது.









