நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் நாளைய தினம் வழமைபோன்று இடம்பெறும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்கள் சம்பள முரண்பாடு உள்ளிட்ட தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி சுகயீன விடுமுறை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.
இந்நிலையிலேயே பாடசாலை கல்வி நடவடிக்கைகள் நாளை 9 ம் திகதி வழமை போன்று இடம்பெறுமென அறிக்கையொன்றினூடாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.








