யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவந்து ஆரம்பிக்க வேண்டுமென பொதுமக்களால் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது, போராட்டக்காரர்கள் ஏ – 9 வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டமையினால் குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.
போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பொலிஸாரும், கலகத்தடுப்பு பிரிவினரும் அங்கு வரவழைக்கப்பட்டனர்.
இந்நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நிலவி வரும் குழப்ப நிலைக்கு மத்தியில்
புதிய வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் நியமிக்கப்பட்டு, கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.








