ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்களா? அல்லது 6 வருடங்களா என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாகவும், உச்சநீதிமன்றம் வியாக்கியானம் வழங்கும் வரை ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சசநீதிமன்றத்தினால் செல்லுபடியற்றதென உத்தரவிடப்பட்டுள்ளது.
மனுதாரருக்கு வழக்கு கட்டணமாக ஒரு லட்சம் ரூபாவை ஒரு மாதத்திற்குள் செலுத்த வேண்டுமெனவும் நீதிபதிகள் குழாம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ, பிரித்தி பத்மன் சூரசேன மற்றும் எஸ். துரைராஜா ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரபல வர்த்தகரான சீ.டீ.லெனாவ என்பவரினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அது தொடர்பில் சமூக மட்டத்திலும் பல்வேறு கருத்துக்கள் நிலவியமை குறிப்பிடத்தக்கது.








