விரைவில் நாட்டில் தேர்தல் ஒன்று அறிவிக்கப்படவுள்ளது. அதற்கு தயாராகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தனது திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக அரசாங்க அச்சுத் திணைக்கள பிரதானி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் 17 ம் திகதி அல்லது ஒக்டோபர் 16ம் திகதிக்கு முன் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுமென தேர்தல் ஆணைக்குழு அண்மையில் அறிவித்திருந்தது.
அதற்கமைய ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் கோரப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏல் ஏ. ரத்நாயக்க அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவ்வாறானதொரு ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு நிர்ணயித்தால் அதற்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் அரசாங்க அச்சுத் திணைக்கள பிரதானி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.









