ஜுலை மாதம் முதல் பஸ் கட்டணம் நூற்றுக்கு 5 வீதம் குறைக்கப்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் அது தொடர்பான தீர்மானம் பெறப்பட்டதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
ஆரம்ப பஸ் கட்டணம் 2 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 28 ரூபா அறவிடப்படும்.
வருடாந்த பஸ் கட்டண திருத்தத்திற்கமையயே குறித்த கட்டண குறைப்பு நடைமுறை அமுலுக்கு வருவதாகவும் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
எனினும் ஒருசில பஸ் சங்கங்கள் குறித்த கட்டண குறைப்புக்கு அதிருப்தி வெளியிட்டுள்ள போதிலும், ஜுலை முதலாம் திகதியிலிருந்து கட்டண குறைப்பு நடைமுறைக்கு வரவுள்ளது.









