காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அவர்களில் 6 பொலிஸ் அதிகாரிகளும் உள்ளடங்குவதாக பலஸ்தீன் தகவல்கள் தெரிவிக்கின்றன.
6 மாத யுத்த நிறுத்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ள நிலையிலும், நாளாந்தம் இஸ்ரேலிய படைகள் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. அதன் காரணமாக சுமார் ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.








