மூதூர் பெரியபாலத்தில் 16 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கிராமோதய சுகாதார நிலையம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சுகாதார நிலையத்தை திறந்து வைத்தார்.
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துகோரல, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டி. ஜி. எம். கொஸ்தா, பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் வீ. பிரேமானந், மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஹில்மி முகைதீன் பாவா உட்பட அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.








