பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்து தொழில் அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானிக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவை வழங்க முடியாதென மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
முதலாளிமார் சம்மேளனம் தாக்கல் செய்த மனு குறித்த விசாரணை இன்று இடம்பெற்றது.
அதன்போது மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குறித்த உத்தரவை பிறபித்துள்ளதோடு
மேலதிக வழக்கு விசாரணை எதிர்வரும் 29 ஆம் திகதி நடைபெறுமென அறிவித்துள்ளது.








