ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் காரியாலயம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பான நிகழ்வு பாடசாலையின் அதிபர் ராஜன் தலைமையில் இடம்பெற்றது. பழைய மாணவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பொறியியலாளர் G.S. பிரஜீவன் உட்பட நிர்வாகக்குழு உறுப்பினர்களின் பங்கேற்புடன், ஆலோசனை சபை உறுப்பினர்கள் முன்னிலையில் திறந்துவைக்கப்பட்டது.
கடந்த எட்டு வருடங்களாக பழைய மாணவர் சங்க காரியாலயம் உரிய வசதிகளின்றி கவனிப்பாரற்று கிடந்த நிலையில் அதனை புனர்நிர்மானம் செய்யப்பட்டு, சங்கத்தின் பாவனைக்காக மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது.








