23 வயதுக்குட்பட்ட மகளிருக்கான National Super League போட்டிகளில் மன்னார் வீராங்கனை சஜந்தினி அறிமுகமாகியிருந்தார்.
பெண்களுக்கான கடினபந்து போட்டிகளில் சிறப்பான பெறுபேறுகளை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வரும் சஜந்தினி , கொழும்பு அணி சார்பாக விளையாடியிருந்தார். 2 ஓவர்கள் பந்து வீசி, எதிரணியினருக்கு 10 ஓட்டங்களை மாத்திரமே அவர் விட்டுக்கொடுத்திருந்தமை சிறப்பம்சமாகும்.
தொடர்ச்சியாக மகளிருக்கான கடினப்பந்து போட்டிகளில் அவரது திறமையை வெளிப்படுத்தும் பட்சத்தில், தேசிய அணியிலும் இடம்பிடிப்பதற்கான வாய்ப்பு, சஜந்தினிக்கு உள்ளது.
தொடர்ச்சியாக அவரது திறமையை வெளிப்படுத்த www.indru.lk இணையத்தின் வாழ்த்துக்கள்.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு மகளிர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 98 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. 99 ஓட்டங்கள் எனும் இலகுவான வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை மகளிர் அணி ஆட்டத்தின் 18வது ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றியை தம்வசப்படுத்தியது.









