யாழ்ப்பாணம் ஆறுகால்மடப்பகுதியில் போதை மாத்திரைகளுடன் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய யாழ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
அதன்போது 110 போதை மாத்திரைகளுடன் 20 மற்றும் 22 வயதான வர்த்தகரொருவரும் , அவருக்கு உடந்தையாக செயற்பட்ட மற்றுமொரு சந்தேக நபரும் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்களிடம் யாழ் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.








