நைஜீரியாவில் எரிபொருளை ஏற்றிச்சென்ற பௌசர் வாகனம் விபத்துக்குள்ளானதில் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
60 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நைஜர் மாகாணத்தில் பீடா பகுதியிலிருந்து பயணித்த வாகனம் , பள்ளமொன்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதனையடுத்து வாகனத்திலிருந்த எரிபொருளை சேகரிப்பதற்கென அதிகளவான மக்கள் குறித்த இடத்திற்கு வருகைதந்துள்ளனர்.
எதிர்பாராத விதமாக வாகனம் வெடித்து சிதறியதில் குறித்த இடத்திலிருந்த பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நைஜீரிய பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.








