2025 லங்கா பிரீமியர் லீக் (LPL)தொடர் நடைபெறாதென ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவகம் அறிவித்துள்ளது.
அதுதொடர்பில் ஶ்ரீ லங்கா கிரிக்கெட் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் 2025 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் தொடரை நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இலங்கையும் இந்தியாவும் இணைந்து நடத்தும் 2026 உலகக் கிண்ணம் டி 20 தொடருக்கான முன்கூட்டிய தயார்ப்படுத்தலுக்கான தேவையை கவனத்திற்கொண்டு குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவகம் அறிவித்துள்ளது.
உலகக் கிண்ண தொடருக்கு முன்னர் மைதான தயார்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமையினால் 2025 லங்கா பிரீமியர் லீக் (டுPடு)தொடர் நடைபெறாதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.








