வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் தானசாலைகள் , வெசாக் தோரணங்கள், ஒழுங்குசெய்யப்பட்டிருந்தன. அவற்றில் மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த தானம் வழங்கும் செயற்பாடுகள் தொடர்பில் பார்க்கலாம்.
- காலி – கராபிட்டியவுக்கு இடையிலான 381ம் இலக்க வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் பஸ் வண்டியொன்று, பயணிகளுக்கான இலவச பஸ் சேவையை வெசாக் பௌர்ணமி தினத்தில் வழங்கியிருந்தது.
- பானந்துறை பகுதியில் மக்களின் இதயத்தை ஈர்க்கும் மற்றுமொரு மனிதாபிமான தான நிகழ்வு இடம்பெற்றது. வீதியோரங்களிலும் கவனிப்பாரற்று கிடக்கும் நாய்க்குட்டிகளுக்கு, உரிய பராமரிப்பாளர்களை தேடி வழங்கும் தான நிகழ்வு இடம்பெற்றது.
- பிலிமத்தலாவ பகுதியில் மரக்கறி தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. பெரும் எண்ணிக்கையிலானோர் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு மரக்கறிகளை பெற்றுச்சென்றனர்.
- வெல்லவாய 5ம் கட்டை பகுதியில், மறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை நினைவுகூர்ந்து, நூடில்ஸ் தானசாலை ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு வருகைதந்திருந்தபோது வெல்லவாய பிரதேச மக்களை சந்தித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
- கஹடகஸ்திஹிலிய துருக்குராகம பகுதியில் இன, மத பேதமின்றி முஸ்லிம் மக்களினால் தானசாலை நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
- லுணுகல அத்தனகொல்ல பகுதியில் இந்து பேரவை அமைப்பினால் வெசாக் தினத்தில் பொதுமக்களுக்கு தர்ப்பூசணி பழங்கள் தானமாக வழங்கிவைக்கப்பட்டன.









