சிவனொளிபாதமலை யாத்திரைக்காலம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. அதற்கமைய சிவனொளிபாதமலை உச்சியில் மக்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டிருந்த புனித விக்கிரகங்கள் மற்றும் ஆபரணங்கள் விகாரைக்கு எடுத்துச்செல்லப்பட்டன. கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் பருவகாலம் ஆரம்பமானது. இம்முறையும் இலட்சக்கணக்கான யாத்திரிகர்கள், சிவனொளிபாதமலைக்கு வருகைதந்ததாக சிவனொளிபாதமலைக்கு பொறுப்பான நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன தேரர் தெரிவித்துள்ளார். யாத்திரைக்காலம் இல்லாத காலங்களில் சிவனொளிபாதமலைக்கு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









