நாட்டில் சீரற்ற வானிலை தொடர்பான சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் தென்மேற்கு பருவமழை காரணமாக மழை மற்றும் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும். அத்துடன் மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 150 மில்லி மீற்றருக்கும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.









