ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் விக்கட் காப்பாளரும், துடுப்பாட்ட வீரருமான தினேஸ் கார்த்திக் ஐபீஎல் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார்.
நேற்றைய தினம் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கெதிரான போட்டியுடன் தினேஸ் கார்த்திக், 17 வருடங்களாக ஆறு அணிகளில் ஐபீஎல் போட்டிகளில் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.
முதன்முறையாக 2008ம் ஆண்டு டெல்லி டெயார் டெவில்ஸ் அணி சார்பாக, தனது அறிமுகத்தை வழங்கியிருந்தார்.
ஆதன்பின்னர் பஞ்சாப், மும்பை, குஜராத் லயன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் என 6 அணிகளில் விளையாடியுள்ளார்.
இம்முறை தொடரில் 15 போட்டிகளில் 326 ஓட்டங்களை தினேஸ் கார்த்திக், அணி சார்பாக பெற்றுக்கொடுத்திருந்தார்.
இந்நிலையில் தினேஸ் கார்த்திக் இதுவரை 257 ஐபீஎல் போட்டிகளில் விளையாடியுள்ள கார்த்திக், 22 அரைச்சதங்கள் உட்பட 4,842 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.









