ஐபீஎல் தொடரின் முதலாவது வெளியேற்றல் சுற்றுப்போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 4 விக்கட்டுகளினால் வெற்றியீட்டியுள்ளது. ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தோல்வியை சந்தித்த நிலையில் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 173 எனும் வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணியினர் 19 ஓவர்களில் 6 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியை பதிவுசெய்து, இரண்டாவது வெளியேற்றல் சுற்றுப்போட்டிக்கான தகுதியை பெற்றுக்கொண்டனர்.
நேற்றைய போட்டியின் ஆட்டநாயகனாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவானார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ள நிலையில், இரண்டாவது வெளியேற்றல் சுற்றில் சன் ரைசஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் ஒன்றையொன்று எதிர்கொள்ளவுள்ளன.
அதில் வெற்றிபெறும் அணி கொல்கத்தா அணியை இறுதிப்போட்டியில் சந்திக்கும்.









