நேபாளத்தில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு பிரதமராக முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி பதவியேற்றுள்ளார்.
அதற்கமைய நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
நேபாளத்தில் கடந்த கடந்த சில தினங்களாக வன்முறைகள் இடம்பெற்றுவந்த நிலையில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் நேபாள அரசாங்கம் கொண்டுவரப்பட்டது. அதனையடுத்து தொடர்ச்சியாக அரசாங்கம் தொடர்பில் ஆலோசனைக்கூட்டங்கள் இடம்பெற்று வந்த நிலையில், அந்நாட்டு பிரதமராக சுஷிலா கார்கி தெரிவுசெய்யப்பட்டு பதவியேற்றுள்ளார்.









