ரஷ்யாவில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. அந்நாட்டிக் கிழக்கு கம்சட்கா தீபகற்பத்திற்கு அருகில் இன்று காலை 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து குறித்த பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கம்சட்கா தீவின் சில பகுதிகளில் 4 மீட்டர் உயரம் வரை அலைகள் எழுந்துள்ளன. இதனையடுத்து செவெரோ, குரில்ஸ்க் உள்ளிட்ட கடலோர நகரங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை கடந்த ஜூலை மாதத்திலும் குறித்த பகுதியில் 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.









