இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியின் முக்கிய வீரரான ஹர்ஷ பெர்ணாண்டோ சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
2012ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரை 13 வருடங்கள் இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்திய ஹர்ஷ பெர்ணாண்டோ , மாலைத்தீவு அணியுடன் இடம்பெற்ற நேற்றைய போட்டியுடன் சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளுக்கு விடைகொடுத்துள்ளார்.
நீர்கொழும்பு பிட்டிபன புனித மரியால் கல்லூரியின் பழைய மாணவரான அவர், பொஸ்கோ விளையாட்டுக்கழகம், இலங்கை விமானப்படை விளையாட்டுக்கழகம், அப்கன்ரி லயன்ஸ் (upcountry lions) விளையாட்டுக்கழகம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்திய தனது கால்பந்தாட்ட திறமையால் தேசிய அணியில் 13 வருடங்கள் நீடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.









