தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களென போற்றப்படும் ரஜினிகாந் மற்றும் கமலஹாசன் ஆகியோர் மீண்டும் திரைப்படமொன்றில் இணைந்து நடிக்கவுள்ளனர்.
46 வருடங்களின் பின்னர் இருவரும் ஒன்றாக இணைந்து நடிக்கவுள்ள நிலையில், அதனை உலகநாயகன் கமலஹாசன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இரு நட்சத்திரங்களின் இணைவு, இந்திய சினிமாவில் மிகப்பெரும் வசூல் சாதனையாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.









