நாட்டில் நிர்மாணிக்கப்படும் பாரிய புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டமான சியம்பலாண்டுவ ‘ரிவிதனவி’ சூரிய சக்தி பூங்காவின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
2030ம் ஆண்டுக்குள் நாட்டின் தேசிய மின்சாரத் தேவைகளில் 70% புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் மூலம் பூர்த்தி செய்யும் இலக்கை அடைவதற்கான ஒரு முக்கிய படியாக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தேசிய மின் கட்டமைப்பில் 100 மெகாவொட் திறனை சேர்க்கும் இந்தப் பாரிய திட்டத்திற்கான முதலீடு 140 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.
மொனராகலை மாவட்டத்தின் சியம்பலாண்டுவ பிரதேச செயலாளர் பிரிவின் கொட்டியாகல கிராம அலுவலர் பகுதியில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் நிர்மாணிக்கப்படும் இந்தத் திட்டம், நிலைபெறுதகு வலு அதிகாரசபை ஊடாக திட்டத் தளம், பிரவேச வீதி மற்றும் குறித்த அனைத்து அனுமதிகளுடன் திட்ட முதலீட்டாளருக்கு வழங்கிய முதல் திட்டமாகும்.









