நாட்டில் நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு ஒரே நேரத்தில் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
தர்ஷிகா குமாரி, பத்மினி வீரசூரிய, ரேணுகா ஜயசுந்தர மற்றும் நிஷானி செனவிரத்ன ஆகியோர் பிரதி பொலிஸ்மா அதிபர்களாக பொறுப்பேற்கவுள்ளனர்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவால் அவர்களுக்கான பதவியுயர்வுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









