அக்குரஸ்ஸ-தெனியாய பிரதான வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.
கொஸ்மோதரஇ கட்டபரு மகா விஹாரையின் எசல பெரஹெரா நிகழ்வு இடம்பெறவுள்ளதால் இன்றும், (06) நாளையும் (07)குறித்த வீதியினூடான போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய இன்றிரவு 08:00 மணி முதல் நாளை நள்ளிரவு 12:00 மணி வரை குறித்த வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அக்குரஸ்ஸ-தெனியாய பிரதான வீதியைப் பயன்படுத்துவோர் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அக்குரஸ்ஸவிலிருந்து தெனியாய நோக்கி பயணிப்போர் கல்தோல சந்தியில் திரும்பி , பெங்கமுவ வீதி வழியாக கொஸ்மோதர நோக்கி பயணிக்கலாம்.
தெனியாயவிலிருந்து அக்குரெஸ்ஸ நோக்கி பயணிப்போர் தியதாவ டி.ஆர்.ஐ. சந்தியில் திரும்பி கொராவ வீதி வழியாக கொஸ்மோதர நோக்கிப் பயணிக்க முடியுமென பொலிசார் தெரிவித்துள்ளனர்.









