தங்கால்ல, மெடில்ல கடலில் நீராடிக்கொண்டிருந்த நிலையில் அலையில் அடித்துச்செல்லப்பட்ட சுற்றுலாப் பயணி காப்பாற்றப்பட்டுள்ளார்.
கடலில் குளிக்கும்போது பெண் சுற்றுலாப் பயணி அலையில் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடற்கரையில் கடமையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸ் உயிர்காக்கும் அதிகாரிகளால் அவர் மீட்கப்பட்டார்.
மீட்கப்பட்ட சுற்றுலாப் பயணி 22 வயதுடைய பிரெஞ்சு நாட்டவரெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.









