நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுக்கு பிண்ணனியாக செயற்பட்டதாக கூறப்படும் ஒன்றிணைந்த குழுக்களைச் சேர்ந்த பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவின் சிறப்புக்குழுவினர், இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின்போதே அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில்
கெஹெலல்பத்தர பத்மே, கொமாண்டோ சாலிந்த , பெக்கோ சமன், பானந்துர நிலங்க, தெம்பிலி லஹிறு அவர்களுடன் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த தரப்பினரின் செயற்பாடுகள் மற்றும் சர்வதேச தொடர்புகள் குறித்தும் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.









