சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்கும் செயற்பாடுகளை இலகுவாக்கும் நோக்கில் டிஜிட்டல் தொழினுட்பத்தில் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. விரைவில் குறித்த முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக டிஜிட்டல் , பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க வேண்டுமாயின் வெஹெரஹெரயிலுள்ள அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். அங்கு சென்று சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற நீண்ட நேரத்தை செலவிடவேண்டியுள்ளதால், பலரும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.
இந்நிலையை கருத்திற்கொண்டே டிஜிட்டல் தொழினுட்பத்தில் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் புதியமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.









