முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
அவர் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நிலையில் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க முன்னிலையில் அது தொடர்பான விசாரணைகள் இன்று இடம்பெற்றன.
இதன்போது பிரதிவாதியான முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே விசாரணைக்கு முன்னிலையாகத் தவறியதால், அவரைக் கைது செய்யுமாறு நீதின்றத்தால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதிவாதியான டயானா கமகேவின் பிணையாளர்களுக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








