Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

ராஜித சேனாரத்னவை கைது செய்யும் அதிகாரம் குறித்து நீதிமன்றம் உத்தரவு

ஆடி 11, 2025
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
ராஜித சேனாரத்னவை கைது செய்யும் அதிகாரம் குறித்து நீதிமன்றம் உத்தரவு

கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வு திட்டத்தை கொரிய நிறுவனம் ஒன்றுக்கு சட்ட நடைமுறைகளை மீறி வழங்கியதன் ஊடாக அரசாங்கத்திற்கு 2.62 பில்லியன் ரூபா கூடுதல் நட்டத்தை ஏற்படுத்திய வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள கடற்றொழில், நீரியல்வள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, தனது தொலைபேசி இணைப்பை செயலிழப்பு செய்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இன்றைய தினம் (11) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

குறித்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்குமாறு பல தடவைகள் ராஜித சேனாரத்னவுக்கு அறிவிக்கப்பட்டபோதும் அவர் பொய்யான காரணிகளை முன்வைத்து, வாக்குமூலம் வழங்குவதை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இந்நிலையில் ராஜித சேனாரத்ன உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய அறிக்கை, சட்டத்தரணி ஊடாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும்இ குறித்த அறிக்கையை ஏற்றுக்கொள்வதற்கான எந்தவொரு சட்ட ரீதியான அடிப்படையும் இல்லையெனவும் அதிகாரிகள் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.

ராஜித சேனாரத்னவை கைது செய்ய பிடிவிறாந்து பிறப்பிக்குமாறும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினர் நீதிமன்றத்தை கோரினர்.

சந்தேக நபருக்கு பிடியாணை பிறப்பிக்கஇ தொடர்புடைய ஆவணங்களை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவருவது அவசியம் என்று நீதவான் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டினார்.
மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அதிகாரம் உள்ளதாக நீதவான் சுட்டிக்காட்டினார். சந்தேகநபரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த, அதிகாரங்களைப் பயன்படுத்துமாறும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு நீதவான் உத்தரவிட்டார்.

 

முந்தைய செய்தி

சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை விபரங்கள்

அடுத்த செய்தி

யோஷிதவின் வழக்கு 28ம் திகதிக்கு ஒத்திவைப்பு

தொடர்புடைய செய்திகள்

ஒஸ்கர் விருதுகளுக்கான இலங்கையின் அதிகாரப்பூர்வ திரைப்படம் ‘Riverstone’!   
அண்மைய செய்திகள்

ஒஸ்கர் விருதுகளுக்கான இலங்கையின் அதிகாரப்பூர்வ திரைப்படம் ‘Riverstone’!   

புரட்டாதி 28, 2026
நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
அண்மைய செய்திகள்

பொகவந்தலாவையில் குடிநீர் குழாய் சேதம் – இரு இளைஞர்கள் கைது

புரட்டாதி 28, 2026
திருமணங்கள் மற்றும் தனியார் நிகழ்வுகளுக்கான இசை உரிமக் கட்டணம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
அண்மைய செய்திகள்

திருமணங்கள் மற்றும் தனியார் நிகழ்வுகளுக்கான இசை உரிமக் கட்டணம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

புரட்டாதி 28, 2026
மாதம்பையில் கோர விபத்து – இரு சிறுவர்கள் உயிரிழப்பு; தாய் படுகாயம்
அண்மைய செய்திகள்

மாதம்பையில் கோர விபத்து – இரு சிறுவர்கள் உயிரிழப்பு; தாய் படுகாயம்

புரட்டாதி 28, 2026
பதுளையில் 51 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா   நாளை
அண்மைய செய்திகள்

பதுளையில் 51 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா நாளை

புரட்டாதி 28, 2026
சதுரங்க உலகில் புதிய வரலாறு படைத்த 11 வயது சிறுமி!
அண்மைய செய்திகள்

சதுரங்க உலகில் புதிய வரலாறு படைத்த 11 வயது சிறுமி!

புரட்டாதி 28, 2026
நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!
அண்மைய செய்திகள்

நேபாளத்தில் பயங்கர பனிச்சரிவு!

புரட்டாதி 27, 2026
வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்
அண்மைய செய்திகள்

வாகனங்களை மீளக் கைப்பற்றும் போது சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் – பொலிஸ்

புரட்டாதி 27, 2026
அடுத்த செய்தி
யோஷித ராஜபக்சவுக்கு விளக்கமறியல்…

யோஷிதவின் வழக்கு 28ம் திகதிக்கு ஒத்திவைப்பு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check