யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக நிதிச்சலவை சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, எதிர்வரும் 28ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித் வழக்கை விசாரிக்கும் நீதிபதி தற்போது விடுமுறையில் உள்ளதால் வழக்கு விசாரணையை எதிர்வரும் 28ஆம் திகதி மீண்டும் முன்னெடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுமார் 73 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் வங்கி இருப்புக்கள் பேணியமையூடாக நிதிச்சலவை சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்துள்ளதாக, சட்டமா அதிபர் குறித்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.









