பாடசாலைகளில் பாடவிதானங்களுக்கென ஒதுக்கப்படும் நேர அளவை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆதற்கமைய ஒரு பாடவிதானத்திற்கென ஒதுக்கப்படும் நேரம் 50 நிமிடங்களாகவும், பாடவிதானங்களின் எண்ணிக்கை 7 ஆகவும் குறைக்கப்படவுள்ளதாக கல்வி , உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வியமைச்சின் செயலாளர் நாலக கலுவௌ தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் மேற்கொள்ளப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து தெளிவுபடுத்தும் நிகழ்வு அநுராதபுரத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டபோதே நாலக கலுவௌ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முதற்கட்டமாக கல்வி மறுசீரமைப்புக்கமைய தரம் ஒன்று முதல் தரம் 6 வரை இந்நடைமுறை கொண்டுவரப்படும்.
ஏவ்வாறெனினும் நேர மாற்றம் மற்றும் பாடவிதானங்களில் மேற்கொள்ளப்படும் குறைப்பு என்பன அனைத்து தரங்களுக்கும் பொருந்தும்.
இந்நிலையில் கால ஒதுக்கீடு தொடர்பில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி , உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வியமைச்சின் செயலாளர் நாலக கலுவௌ தெரிவித்துள்ளார்.









