2024ம் ஆண்டிற்கான சிறந்த மனிதராக டொனால்ட் ட்ரம்ப் தெரிவாகியுள்ளார்.
இவ்வாண்டின் சிறந்த மனிதர் குறித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அதிக வாக்குகளுடன் முதலிடத்தை பெற்றுள்ள அவர், டைம் இதழில் இடம்பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ஆங்கில வார இதழான டைம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய நிகழ்வுகளிலும், செய்திகளிலும் அதிகம் செல்வாக்கு மிக்க நபரை தேர்வுசெய்து டிசம்பர் மாத இதழில் வெளியிட்டு வருகிறது.
இதற்காக சர்வதேச அளவில் வாக்கெடுப்பு நடத்தி மிகச்சிறந்த மனிதரை தெரிவுசெய்யப்பட்டு, அவரின் புகைப்படம் டைம் இதழில் வெளியாகும்.
ஏற்கனவே கடந்த 2016 ம் ஆண்டு டைம் இதழின் சிறந்த மனிதர் பட்டியலில் டிரம்ப் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.








