நாடளாவிய ரீதியில் அரிசி தொடர்பான சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய நேற்றைய தினத்தில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் சுமார் 75 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டதாக அதிகார சபையின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.
எதிர்வரும் தினங்களில் வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் சோதனைகளை நடத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும்இ இறக்குமதி செய்யப்பட்ட அரிசி கையிருப்பு சந்தைக்கு வருவதால் அரிசியின் விலை எதிர்வரும் நாட்களில் குறைவதைற்கான சாத்தியம் காணப்படுகிறது.
இதனிடையே 5இ200 மெற்றிக் தொன் அரிசி தொகையின் முதல் தொகுதி எதிர்வரும் 19ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.








