இவ்வருடத்திற்கான விண்கல் பொழிவு இன்றும், நாளையும் இடம்பெறவுள்ளது.
இது மிகவும் அற்புதமான விண்கல் மழையில் ஒன்றாக கருதப்படும் ஜெமினிட்ஸ் விண்கல் மழை என ஆர்தர் சி. கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (13) மற்றும் நாளை (14) இரவு விண்கல் பொழிவை அவதானிக்க முடியும். எனினும் நாளை இரவு வடகிழக்கு வானில் பொது மக்கள் விண்கல் பொழிவை தெளிவாக காண முடியும். இரவு 9 மணிக்குப் பின்னர் வடகிழக்கு வானில் மணித்தியாலத்துக்கு 120 விண்கற்கள் தோன்றும் என ஆர்தர் சி கிளார்க் மத்திய நிலையத்தின் வானியல் சிரேஷ்ட ஆராய்ச்சி விஞ்ஞானி இந்திக மெதகங்கொட தெரிவித்தார்.








