சபாநாயகர் அசோக்க ரன்வல தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
கடந்த சில தினங்களாக அவரது கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை எழுந்ததையடுத்து அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அசோக்க ரன்வல ,
தனது கல்வித் தகுதி குறித்து இதுவரை எவ்வித பொய்யான அறிவிப்புக்களையும் விடுக்கவில்லை.
ஆனால்இ கல்வித் தகுதியை உறுதிப்படுத்த தேவையான சில ஆவணங்கள் இல்லாததாலும்இ அவற்றை உரிய நிறுவனங்களிடம் பெற வேண்டியதாலும்இ தற்போது அந்த ஆவணங்களை விரைவாகச் சமர்ப்பிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனக்கு முனைவர் பட்டம் வழங்கிய ஜப்பானில் உள்ள வஷிதா பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஆராய்ச்சி நிறுவனத்தினால் குறித்த கல்வி ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும்இ விரைவில் அவற்றை சமர்ப்பிக்க உத்தேசித்துள்ளேன்.
எவ்வாறாயினும்இ ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டுஇ அரசாங்கம் மற்றும் எம்மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக நான் தற்போதைய சபாநாயகர் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.








